வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, ராதிகா சரத்குமார், எமி ஜாக்சன் , சதீஷ் நடித்துவரும் படம் விஐபி2’. படத்திற்கு இசை அனிருத். படத்தின்  படப்பிடிப்பு பகுதிகள் நிறைவடைந்துவிட்டதாக சமந்தா மற்றும் ராதிகா ஆகியோர் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளனர். 
நேற்று இரவு சூப்பர் சாப்பாடு.. ஜாலியான நபர் என்பதையும் கடந்து உலகின் மிகச்சிறந்த குக் ராதிகா சரத்குமார்  என சமந்தா, ராதிகாவுடனான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் ராதிகாவும், சமந்தாவும் எமி ஜாக்சன் அழகாக தமிழ் பேசுவதாக கூறி எமி ஜாக்சனை புகழ்ந்துள்ளனர். 
எமி ஜாக்சன் தமிழால் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். என ராதிகா சரத்குமாரும், ஒரு அயல்நாட்டுப் பெண்ணான எமி ஜாக்சன் அழகாக தமிழ் பேசுவதை பார்க்கையில் ஆச்சர்யமாக உள்ளது. எமி ஜாக்சன் உங்களுடன் பணி புரிந்ததில் மகிழ்ச்சி. என சமந்தா ட்வீட் செய்துள்ளார்.
அதை ரீட்வீட் செய்துள்ள எமி ஜாக்சன் கண்டிப்பாக இது சிறப்பான ஒன்றுதான் ஒரு அழகிய பெண்ணுடன் என் வேலையை பகிர்ந்துகொண்டதில் என ட்வீட் செய்து இருவருக்கும் நன்றி கூற இந்த மூன்று பெண்களின் நட்பு ட்விட்டரில் வைரலாகிவருகிறது

0 comments:

Post a Comment

 
Top