தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும், நடிகர் விஷால் அணியினருக்கும் இடையே நடிகர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. நடிகர் சங்கத்தில் பெரும் முறைகேடு நடப்பதாக நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என்று சங்கத் தலைவர் சரத்குமார் அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, நடிகர் விஷால் உள்ளிட்ட சில நடிகர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது.
இந்நிலையியில், "நடிகர் சங்க விவகாரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் திருமண மண்டபம் கட்ட சொன்னார்கள். அதைவிட வருமானம் தரக் கூடிய வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம். அப்போதெல்லாம் குற்றம் சொல்லாதவர்கள், எங்களை சந்தித்து எந்த கருத்தும் சொல்லாதவர்கள், தற்போது தேவையில்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னால் அரசியல் சதி இருக்கிறது" என சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இப்படி நடிசர் சங்க கட்டப் பிரச்னை நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் ஆகியோர் இதுவரை வாய் திறந்து ஒரு கருத்து கூட தெரிவிக்கவில்லை.
நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக ரஜினிகாந்த எந்தவிதமான கருத்துகளையும் கூறவிரும்பவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் தரப்பிலோ, நடிகர் சங்க தேர்தலுக்கு பின்னர் கருத்து கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜீத்குமாரும், இது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருக்கும் நடிகர் விஜய், நாடு திரும்பிய உடன் தனது கருத்தை தெரிவிப்பார் என்று அவரது தரப்பு கூறுகிறது.

நடிகர்கள் சிவகுமார், பொன்வண்ணன், கருணாஸ், ஆனந்தராஜ் ஆகியோர் விஷாலுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்திக், பாக்யராஜ் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் யாருக்கு ஆதரவு என்று இதுவரை தெரிவிக்கவில்லை. நடிகர் சூர்யா, தனது சகோதரர் கார்த்தி பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்க கட்டடப் பிரச்னை விவகாரத்தில் முன்னணி நடிகர்களின் மவுனம், மற்ற நடிகர்கள் மத்தியில் ' யார் பக்கம் நிற்பது? ' என்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் இறங்க உள்ளது. இதனால், ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலின்போது பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment