நாடு முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று முனைப்போடு பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி வைத்தார்.

பல பாலிவுட் பிரபலங்கள் இந்த திட்டத்தில் இணைந்து தெருவில் இறங்கி குப்பைகளை அள்ளி போட்டனர். தமிழ் நடிகர், நடிகைகள் சிலரும் இதற்கு ஆதரவளித்தனர். தற்போது இதில் விஜய்யும் இணைந்துள்ளார். ஒரு புதிய முயற்சியாக க்ளீன் இந்தியா என்கிற வீடியோ கேம் மூலம் களமிறங்குகிறார் விஜய்.
இந்த வீடியோ கேம் அவரது பிறந்த நாளான ஜூன் 22 முதல் அறிமுகமாகிறது. இந்த கேமில் விஜய் துடைப்பத்துடன் சென்னை உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் தூய்மை செய்வது போல் அந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளதாம். கத்தி கேமை உருவாக்கிய குழுவே இதையும் உருவாக்கியுள்ளதாம்.

0 comments:

Post a Comment

 
Top