சிங்கம் இளைச்சுதுன்னா சிக்கன் பீஸ் இருக்கான்னு கேட்குமாம் பூனை? அப்படியாகிவிட்டது ரஜினியின் நிலைமை. கடந்த சில மாதங்களாகவே லிங்கா பிரச்சனையில் கொசுக்கடியை விடவும் கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகிவிட்டார் ரஜினி. எப்படியோ? நஷ்டத்தொகையை கொடுத்துவிட்டு நடையை கட்டலாம் என்றால், அதற்குள் ஆயிரம் குழப்பங்கள். குழாயடிகள்…
தனது சொல்லுக்கு நியாயம் கிடைக்காத வரை ரஜினி குறித்த விமர்சனங்களையும் தாக்குதலையும் நிறுத்த மாட்டார் போலிருக்கிறது விநியோகஸ்தர் சிங்காரவேலன். தினந்தோறும் ஒரு ஸ்பூப் டைப் கிளிப்பிங்ஸ்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வருகிறார் அவர். திரையுலகம் முழுவதையும் சுற்றி வருகிறது அந்த வாட்ஸ் ஆப் வீடியோக்கள்.
இப்போது அதற்கும் மேலே ஒரு ஸ்டெப் போகவிருக்கிறார் சிங்காரவேலன். விநியோகஸ்தராக அவர் வெளி படங்களை வாங்கி வெளியிட ரகசியமாக ரெட் போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். சமீபத்தில் அவர் வெளியிடுவதாக பேசி வைத்திருந்த அச்சாரம் படம் கூட கடைசி நேரத்தில் அவர் கையை விட்டு போய்விட்டது. இந்த எரிச்சலில், ‘விநியோகம் செய்வதைதான் உங்களால் தடுக்க முடியும். நானே ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டால், அதை யாரால் தடுக்க முடியும்?’ என்கிறாராம். அந்த படம்தான் இந்த பாட்ஷா ஸ்பூப்.
இதில் ரஜினியாக பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறாராம். வில்லனாக மன்சூரலிகான் நடிக்கிறாராம். படத்தில் இவர்தான் லிங்கா தயாரிப்பாளர்.அந்த படம் ஓடாமல் போய், பவர் ஸ்டார் சீனிவாசனிடம் விநியோகஸ்தர்கள் அந்த நஷ்ட பணத்தை வாங்க போராடுவதுதான் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். ஸ்பூப் வகை படங்களுக்கு ரீமேக் ரைட்ஸ் வாங்க தேலையில்லை என்பதால் பாட்ஷா படத்தின் பெரும் பகுதியை இதில் சுரண்டி சுரண்டி எடுப்பார்கள் போலிருக்கிறது.
கொழுத்த சேதாரத்தை ஏற்படுத்தாத வரைக்கும் இந்த கூட்டத்தின் அராஜகம் ஒயாது போலிருக்கே?

0 comments:

Post a Comment

 
Top