மற்ற எவருக்கும் இப்படியெல்லாம் ஆர்வம் கொப்பளிப்பதில்லை. அஜீத், விஜய் இருவர் படங்களுக்கு மட்டும், அது பற்றிய யூகங்கள் கொடிகட்டி பறக்கும். லேட்டஸ்ட் கொடி? அஜீத்தின் புதிய படம் பற்றிதான்.
டைரக்டர் சுசீந்திரன், அஜீத்திற்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், சிறுத்தை சிவா இயக்குகிற படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் அவர் நடிக்கவிருப்பதாகவும் கடந்த சில தினங்களாக மீடியாவில் செய்திகள் பரபரப்பாகிறது.
அந்த வரிசையில் இன்று ஒரு தகவல்- ஆனால் இது வேறொன்று! சுசீந்திரன் இடத்தை கே.வி.ஆனந்த் காலி பண்ணிவிட்டார் என்பதுதான் அது. அஜீத்தும், கே.வி.ஆனந்தும் இணைந்து படம் பண்ண போகிறார்கள் என்கிற தகவல் இன்று நேற்றல்ல… பல மாதங்களாகவே கசிந்து வருகிறது. இந்த நிலையில்தான் சற்றே அதிகாரபூர்வமாக அதே செய்தி மீண்டும் உலவ ஆரம்பித்திருக்கிறது.
இருவரும் இணையும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். பொதுவாகவே தூய தமிழில் படத்தின் தலைப்பை வைக்கும் வழக்கமுள்ள கே.வி.ஆனந்த் இந்த படத்திற்கு உஸ்தாத் என்ற பெயரை பரிசீலித்து வருகிறாராம். (இது அஜீத்திற்கு பிடிச்சிருக்கணுமே?) ‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பை முடிவு பண்ணுவதற்குள் கவுதம்மேனன் பக்கம் பக்கமாக இம்போசிஷன் எழுதியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது கே.வி.ஆனந்தின் இந்த உஸ்தாத் என்ற தலைப்பை அஜீத் விரும்புவாரா? இல்லை … மாற்ற சொல்வாரா? புரியவில்லை.
ஆனால் உஸ்தாத் என்றால் பலசாலி, பயில்வான் என்று அர்த்தமாம். அஜீத்தை வெயிட்டு தூக்க விட்ருவாரோ?
பின் குறிப்பு- நீங்க அஜீத் படத்தை இயக்கப் போறீங்களாமே? என்று சில நிருபர்கள் கே.வி.ஆனந்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘அப்படியெல்லாம் இல்லீங்க. யாரோ கிளப்பிவிடுறாங்க’ என்று மறுத்திருக்கிறார் அவர்.
இல்ல இல்லன்னு சொன்னா ஆமா ஆமாம்னு அர்த்தம். இது சினிமா அகராதியில…!
0 comments:
Post a Comment