உலகத்திலேயே எல்லா அப்பாக்களுக்கும் பிடித்த கேள்வி இதுவாகதான் இருக்க முடியும்? ‘என்னங்க… உங்க வீட்ல உங்க பையனே பொறாமைபடுற அளவுக்கு ஸ்மார்ட்டா இருக்கீங்களே, எப்படி?
கொஞ்சம் மாற்றி அதையே கார்த்திக்கிடம் கேட்டால், ஆஹ்ஹாவ்வ் என்று சிரிக்கிறார் அவர். ‘உங்க பையனுக்கு நடிக்க வர்ற வாய்ப்பை விட உங்களுக்குதான் நிறைய வருதாமே?’ இதுதான் கேள்வி. தனது பேவரைட் சிரிப்பை சில நிமிஷங்கள் அதிரவிட்ட கார்த்திக், ஹை… என்ன. ஹை இப்படி ஹ கேட்டுட்டீங்க. ஹ… அவரு ஸ்மார்ட். அவருக்கு நான் ஹ… எப்பவுமே ஹை போட்டியில்ல… என்று பேசி முடிக்கையில் கார்த்திக் மாறவேயில்லை என்பது மட்டும் புரிந்தது.
மகன்கள் மீது அப்பாக்கள் வைத்திருக்கும் பாசத்தை அவர் அந்த ஒரு கேள்விக்கு பதிலாக உளறி உளறி சொல்லி முடித்தாலும், கணவர்கள் நினைப்பதை மனைவிகள் நினைப்பதில்லையே? யெஸ்… கார்த்திக்கின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவியின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவரது சித்தி மகனும் இப்போது வளர்ந்து வாலிபராக இருக்கிறாராம். ‘அந்த பையனை நடிக்க அனுமதிச்சீங்க, என் பையனை மட்டும் ஏன் வேணாங்கிறீங்க? அவனும் நடிக்கணும்’ என்று போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம் கார்த்திகின் இளைய மனைவி.
இரண்டு மனைவிக்காரர்களின் ரோதனை இப்போது கார்த்திக்கையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதால், கோகுலத்தில் சீதையாக ஜொலிக்க வேண்டியவர்களையும் கோகுலத்தில் வதையாக எண்ணி தவித்துக் கொண்டிருக்கிறார் அவர்.
0 comments:
Post a Comment