பாடலாசிரியர் பா.விஜய் கலைஞரின்,"ஞாபகங்கள்" மற்றும் "இளைஞன்" போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பின்பு இப்போது நாயகனாக நடிக்கும் படம் "ஸ்ட்ராபெரி".
இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். யுவ்னி, அவ்னி மோடி இதன் நாயகிகள்.
இவர்களோடு சமுத்திரக்கனி, தம்பிராமையா, தேவயானி ஆகியோரும் இருக்கிறார்கள். இசை தாஜ்நூர்.
மேலும் முழுப் படத்தையும் சென்னை, அந்தமான், பாண்டிச்சேரி பகுதிகளில் சுமார் 60 நாட்களில் முடித்திருக்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட்டில் பெரும் பகுதியை கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக ஒதுக்கியிருக்கிறார்களாம். "இது திகில் படம்" என்று ஒற்றை வரியில் சொல்லிவிடமுடியாது. இப்போது முக்கால்வாசி ரசிகர்கள் சி.டி., சின்னத்திரை என முடங்கி விடுகிறார்கள்.
இந்நிலையில், "ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவது என்பது மிகப் பெரிய சிரமம். அப்படி வருகிற ரசிகர்களுக்கு நாம் எதையாவது புதுமையாக சொன்னால்தான் திருப்தி அடைவார்கள்.
அதுக்காகவே பல நாட்கள் ரூம் போட்டு யோசித்த கதை இது. அந்த நம்பிக்கையில்தான் நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன்.
என்னுடைய முந்தைய படங்களை ஒப்பிடும்போது இது எனக்கு வேறு ஒரு பரிமாணமாக இருக்கும்" என்கிறார் பா.விஜய்.
0 comments:
Post a Comment