தமிழ் சினிமாவையே கலக்கி வரும் அண்ணன்-தம்பி கூட்டணி தான் சூர்யா-கார்த்தி. ஆனால், இவர்களை விட 80 மற்றும் 90 களில் 100 மடங்கிற்கு மேல் உச்சத்தில் இருந்தவர் சிவகுமார்.
அவருக்கு இந்த வருடம் மிகவும் ஸ்பெஷலான வருடம். ஏனெனில் இந்த வருடத்துடன் சிவகுமார் திரைப்பயணத்தில் காலடி எடுத்து வைத்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.
1965ம் ஆண்டு காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், கந்தன் கருனை, அன்னை வேளாங்கன்னி, ஆட்டுகார அலுமேலு என பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சில வருடங்கள் ஹீரோவாக நடித்தது மட்டுமில்லாமல், தன் வயது அறிந்து பூவேல்லாம் உன்வாசம், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.
ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஓவியராக சிவகுமார் எல்லோரையும் கவர்ந்தவர். இவரின் இமாலய சாதனை என்றுமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவை. சிவகுமார் அவர்களின் கலைசேவைக்கு சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.
0 comments:
Post a Comment