தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த சினேகா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு பெரியளவில் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இவருக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடைபெற்றது.
நடிகர்கள் நரேன், சிபிராஜ், நடிகைகள் மீனா, சங்கீதா, பிரிதா ஹரி மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு பிரசன்னா- சினேகா ஜோடியை வாழ்த்தி சென்றனர்.
0 comments:
Post a Comment