‘புலி’ படத்தை முடித்துவிட்டு லண்டன் பறந்து சென்ற விஜய் தன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு ஜூன் 25ஆம் தேதி தாயகம் திரும்புகிறார். வந்தவுடனே தன் அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தில் நடிக்கவிருக்கிறார். அட்லி இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் எமி ஜாக்சன், சமந்தா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தாணு தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பாராதிராஜா நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஜுன் 27ம் தேதி தொடங்கும் என தற்போது தெரியவந்துள்ளது. இதன் படப்பிடிப்பை ஆதித்யாராம் ஸ்டூடியோவில் தான் தொடங்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டாராம். இதற்கு காரணம் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இங்குதான் தொடங்கியதாம். அப்படம் நன்றாக வந்துள்ளதால் இனி தன் படங்கள் எல்லாம் அப்படியே ஆகட்டும் என்றாராம் இளையதளபதி.
விஜய்யின் இந்த ராசியைத் தொடர்ந்து தனுஷும் ராசி, சகுனம் பார்த்து வருகிறாராம். கடந்த 2014ஆம் ஆண்டு தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ ஜூன் 18ஆம் தேதி வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள ‘மாரி’ படத்தையும் ஜூன் 18ஆம் தேதியே வெளியிட ஆர்வம் காட்டுகிறாராம் தனுஷ்.

0 comments:
Post a Comment